மார்ச் 30, 2022 தேதியிட்டது, ஜூலை 1, 2017 அன்று பான் ஒதுக்கப்பட்ட மற்றும் ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுடைய ஒவ்வொரு நபரும் மார்ச் 31, 2022 அன்று அல்லது அதற்கு முன் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை ஏற்கனவே அறிவித்திருந்து.
அவ்வாறு செய்யத் தவறிய வரி செலுத்துவோர் திரும்பப்பெறாத கட்டணமாக ரூ. 500 ஜூன் 30, 2022 வரை மற்றும் அதன் பிறகு கட்டணம் ரூ. 1000 பான்-ஆதார் இணைப்புக் கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முன் செலுத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.
ஆதார்-பான் இணைப்பிலிருந்து பின்வரும் நபர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
(i) என்.ஆர்.ஐ.க்கள்(NRIs-)
(ii) இந்தியாவின் குடிமகன் அல்லதவர்கள் (Not a citizen of India)
(iii) நடப்பு தேதியின்படி 80 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் (age > 80 years as on date)
(iv) அஸ்ஸாம், மேகாலயா அல்லது ஜம்மு & காஸ்மீர் மாநிலங்களில் வசிப்பவர்கள் (state of residence is ASSAM, MEGHALAYA or JAMMU & KASHMIR)
நீங்கள் இதுவரை இணைக்கவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி இணைத்துக்கொள்ளலாம்.
உங்கள் பான்கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க கீழே உள்ள படிகளைப் பின்பற்றவும்
1. முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வருமான வரி மின்-தாக்கல் இணையதளத்தைப் பார்வையிடவும்.
Clilck the LINK: https://www.incometax.gov.in/iec/foportal.
2.”Quick Links” பிரிவின் கீழ் கிடைக்கும் இடது புறத்தில் உள்ள “Link Aadhaar” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
3.உங்கள் பான் எண், ஆதார் எண் மற்றும் ஆதார் அட்டையின்படி பெயரை அந்தந்த இடங்களில் நிரப்பவும்.
4.உங்கள் ஆதார் அட்டையில் பிறந்த வருடம் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தால், “square box” ல் டிக் செய்யவும்.
5.மொபைல் எண்ணில் பெறப்பட்ட 6 இலக்க OTP ஐ உள்ளிடவும். முந்தைய கட்டத்தில் குறிப்பிட்டு, சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
6.”Link Aadhar” பட்டனை கிளிக் செய்யவும்.
7.உங்கள் பான் கார்டை ஆதார் கார்டுடன் வெற்றிகரமாக இணைத்ததை உறுதிப்படுத்தும் தகவல் திரையில் காட்டப்படும்.
குறிப்பு:
பான் எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2023. ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், 2023 ஏப்ரல் 1 முதல் பான் செயல்படாது.
குறிப்பு : மேற்கூறிய அனைத்து தகவல்களும் வருமான வரித்துறை இணையதளத்திலிருந்து பெறப்பட்டது.
மேலும் சந்தேகங்கள் அல்லது தகவல்களுக்கு வருமான வரி ஆலோசகர் அல்லது வருமான வரி அலுவலத்தை நேரில் தொடர்பு கொள்ளுங்கள்.
இந்த தளத்தின் மூலம் தங்களுக்கு தகவல்கள் மட்டுமே பகிரப்பட்டுள்ளன இதன் மூலம் தாங்கள் எடுக்கும் எந்தவித தனிநபர் முடிவுகளுக்கும் மற்றும் இழப்புகளுக்கும் இந்த இணையதளம் பொறுப்பேற்க்காது