பாரம்பரிய சிறுதானியமான கம்பு நம் அனைவருக்கும் தெரிந்ததே ..!!!
இவை எளிதில் அணைத்து கடைகளிலும் கிடைக்கும் மேலும் விலை குறைவானதும் கூட அனால்,நம்மில் பெரும்பாலும் இந்த உணவை எடுத்துக்கொள்வதில்லை.
இதில் எண்ணற்ற சத்துக்களும்,நன்மைகளும் இருக்கின்றன.அதில் ஒன்றான கம்பு கூழ் (கம்பங்க்கூழ் ) செய்முறையை பார்க்கலாம் …!
கம்பு கூழ் செய்ய தேவையான பொருட்கள்: (செய்முறை விளக்கம் ஒரு கப் அளவிற்கு கொடுக்க பட்டுள்ளது) உடைத்த கம்பு - 1 கப் அளவு தண்ணீர் -5 கப் அளவு நறுக்கிய சின்ன வெங்காயம் -ஒரு கைப்பிடி அளவு ஓமம் -1/2 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப
உங்களுக்கு காய்கறி தேவை எனில் தேவைக்கேற்ப கேரட் ,பீன்ஸ் போன்றவற்றை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இவை குழந்தைகளுக்கு பிடிக்கும்.
வாருங்கள் செய்முறையை பார்க்கலாம் :
முதலில் ஒரு பெரிய பானையை உங்கள் கம்பு அளவை பொறுத்து எடுத்துக்கொள்ளுங்கள் ,முடிந்தால்
மண்பானை இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் , பின்னர் அதில் தண்ணீரை முதலில் ஊற்றி கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் கொதித்ததும் கம்பு-ஐ சிறிது சிறிதாக சேர்த்து அத்தத்துடன் காய்கறி இருந்தால் அதனையும் சேர்த்து வேக-வையுங்கள் .பானை திறந்தே இருக்கட்டும் மூடி விடாதீர்கள்.சிறிது நேரம் கழித்து உப்பு மற்றும் வாசனைக்காக ஓமம் சேர்த்து கம்பு மென்மையாகும் வரை வேகவைக்கவும்.
இப்போது கம்பு உணவு தயார் ஆகிவிட்டது .உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் சூடாகவோ அல்லது அதனை தயிர் கலந்து குளிர்ச்சியாகவோ பருகலாம்.
இதன் பயன்கள் ஏராளம் அதில் சிலவற்றை பார்க்கலாம் :
1.தாய்ப்பால் அதிகரிக்க.
2.முடி உதிர்வை கட்டுப்படுத்த.
3.உடல் எடையை குறைக்க.
4.செரிமான பிரச்சனையை குறைக்க.
5.சரும பிரச்சனைக்கு.
6.இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த.
7.நீரிழுவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும்.
நன்றி…!!!