சிறந்த பங்கு தரகர்கள் பெரும்பாலும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய சான்றளிக்கப்பட்ட முகவர்கள் என குறிப்பிடப்படுகிறார்கள் .
பொதுவாக பங்குகளை வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடைத்தரகர்களாக செயல்படுகிறார்கள் மற்றும் அதற்கான சேவைகளை வழங்குவதற்கு கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இந்தியாவில் சிறந்த பங்கு தரகர்கள் முதலீட்டாளர்களுக்கு குறைந்த தரகு கட்டணத்தில் தங்கள் சேவைகளை வழங்குகிறார்கள்.
இந்தியாவில் இரண்டு வகையான பங்கு தரகர்கள் உள்ளனர் :
1.முழு சேவை தரகர்கள்.(Full Service Brokers)
2.தள்ளுபடி தரகர்கள்.(Discount Brokers)
முழு-சேவை தரகு நிறுவனம் தனிப்பயனாக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் சேவைகளை வழங்குகின்றன, இதற்காக அவர்கள் தனிப்பட்ட கட்டணம் வசூலிக்கின்றன.
எனவே நீங்கள் முழு சேவை தரகர்கள் பட்டியலிலிருந்து சிறந்த பங்கு தரகரைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் சற்று கவனமாகவும் அதன் கட்டண விவரங்கள் போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்து பின்னர் முடிவு செய்யுங்கள்.
இந்தியாவில் 10 சிறந்த முழு சேவை தரகர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ன :
1.Angel Broking
2.ShareKhan
3.Kotak Securities
4.ICICI Direct
5.HDFC Securities
6.Motilal Oswal
7.Edelweiss
8.Karvy
9.SBI Cap Securities
10.Axis Direct
தள்ளுபடி தரகர்கள் முழு-சேவை தரகு நிறுவனகங்களை விட சிறந்த முதலீட்டு கருவிகளை வழங்குவதாக அறியப்படுகிறார்கள்.
மேலும் அவர்கள் குறைந்த தரகு கட்டணத்தையும் அத்துடன் முதல் வருடம் இலவச பராமரிப்பு சேவையையும் வழங்குகிறார்கள்.
தள்ளுபடி தரகர்களுடன், நீங்கள் கணினிமயமாக்கப்பட்ட வர்த்தக அமைப்பு மூலம் இணையத்தில் வர்த்தகம் செய்யலாம் .
இந்தியாவில் 10 சிறந்த தள்ளுபடி சேவை தரகர்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ன :
1.Zerodha Broking Limited
2.Upstox
3.INVEZT
4.Samco
5.Wisdom Capital
6.SAS Online
7.Trade Smart Online
8.Prostocks
9.Trading Bells
10.Finvasia
நீங்கள் பங்கு தரகரை தேர்வு செய்யும் முன் நினைவில் வைத்து கொள்ளவேண்டியது :
ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் சிறந்த பங்கு தரகரை தேர்வு செய்யும் போது, அவற்றின் ஒட்டுமொத்த சேவைகள் மற்றும் கட்டணங்களின் அளவு மற்றும் நிலைப்பாட்டையும் கருத்தில் கொண்டு தேர்வு செய்வது சிறந்தது.
இது முதலீட்டாளர்களாகிய ஒருவரின் தனிப்பட்ட தேவைகள், சேவைகள் மற்றும் வழங்கப்படும் அம்சங்களைப் பொறுத்தது.
இந்தியாவில் பதிவுசெய்யப்பட்ட சிறந்த பங்கு தரகர்களின் பட்டியலை நாங்கள் உங்கள் பார்வைக்காக தொகுத்துள்ளோம்.
நீங்கள் அதிக தரகு கட்டணம் செலுத்த விரும்பம் இல்லை என்றால், தள்ளுபடி தரகர்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
இருப்பினும், உங்களுக்கு பங்குகள் குறித்த ஆலோசனை தேவைப்பட்டால் மற்றும் நீங்கள் அதிக அளவில் வர்த்தகம் செய்பவராக இருந்தாலும் நீங்கள் முழு சேவை தரகரைக் கருத்தில் கொள்வது நல்லது.
Disclaimer: தளத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பயனர்கள் எடுக்கும் செயல்களுக்கு இணையதளங்கள் பொறுப்பேற்காது என்பதை நிதி மறுப்புகள் அடிக்கடி குறிப்பிடுகின்றன.