யப்பா…!!! யார்-டா இந்த மனுஷன் இப்பவே பாக்கணும் போல இருக்குதே அப்படினு உங்களுக்கு தோணுதா,அந்த உயர்த்த மனிதர் இப்போ உயிரோட இல்லங்க…!!!
இப்படிக்கூட ஒரு சம்பவம் நடக்குமா என்று நீங்கள் ஆச்சர்யப்படலாம்.அனால் , ஹாங்காங்-ல் இது போன்ற ஒரு உண்மை சம்பவம் நடந்துள்ளது.
ஆசியாவின் நம்பர் 1 பணக்கார பெண்மணியாக இருந்த 69 வயதான “நினாவாங்” தான் அந்த அதிசய பெண்மணி.அவருக்கு ஏகப்பட்ட நிறுவனங்கள், எஸ்டேட் மற்றும் நிலங்கள் இருந்தன. இதெல்லாம் இருந்து என்ன பயன் அவருக்கு 2009- ம் புற்றுநோய் ஏற்பட்டு பெரிதும் அவதி பட்டு வந்தார்.
அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள பல்வேறு வழிமுறைகளை நாடிய அவர் கடைசியாக”டோனிசன்” என்ற நபரை அணுகினார்.அப்போது டோனிசன்-கு வயது சுமார் 47 இருக்கும்.
இந்நிலையில் டோனிசன் ஒரு நாள் நினாவாங்க்கிடம் “உங்களுக்கு புற்றுநோய் குணமாகிவிட்டது” நீங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்வீர்கள் என்று கூறியுள்ளார்.இத்தகைய பேச்சை கேட்டு முழுமையாக தான் குணமடைந்து விட்டதாக எண்ணிய வாங்க் சில நாட்களிலேயே டோனிசனின் பேச்சில் முழுமையாக மயங்கி விட்டார்.
அதன் பின்னர்,ஒருநாள் டோனிசன் “வாங்”-கிடம் நீங்கள் 100 ஆண்டுகளுக்கு பின்னர் மேலுலகம் சென்றாலும், அங்கும் நலமுடனும் திருப்தியாகவும் வாழ நான் உங்களுக்காக என் மந்திர சத்தியை பயன்படுத்தி பிராத்தனை செய்ய விருப்பபடுகிறேன்.
அனால்,அதற்கு நிறைய செலவு ஆகும் அதற்க்கான செலவுகளை செய்ய என்னிடம் போதுமான அளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.
அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று வாங் கேட்க , உங்கள் சொத்தை என் பெயரில் எழுதிதர வேண்டும் என்று கூறினார் டோனிசன்.இதனை முழுவதும் நம்பிய “வாங்” சொத்துக்களை ஏற்கனவே அவரது தங்கைகள் மற்றும் சில சமூக அறக்கட்டளைகளுக்கு பிரித்து எழுதி வைத்த உயில்களை ரத்து செய்து,அவருடைய மொத்த சொத்து சுமார் 52 ஆயிரம் கோடியை டோனிசனின் பெயருக்கு புதிய உயில் தயாரித்து எழுதி விட்டார்.
உயில் எழுதிய சில நாட்களுக்குள் “வாங்” இறந்துவிட்டரர் ,இதனைஅடுத்து அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால் அவருடைய முழு சொத்தும் டோனிசனுக்கு சொந்தமாகி விட்டது.
அனால்,இப்போதெல்லாம் வாழ்க..! வாழ்க..! என்று எவ்வளவு தான் கோசம் போட்டாலும் கடைசில் ஒரு வேலை உணவு மட்டும் கிடைத்தாலே பெரிய விஷயம் தான்..!
மேலும்,இதுபோன்ற உண்மை சம்பவங்களை தெரிந்துகொள்ள எங்கள் வலைத்தளத்தை பின்தொடருங்கள்..!!!