அதற்கு முன் இந்த பதிவை பார்த்துவிட்டு செல்லுங்கள்.பொதுவாகவே இன்றைய டிஜிட்டல் வர்த்தக உலகில் பெரும்பாலான மக்கள் அனைவரும் பணத்திற்கு மாற்றாக டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,BHIM UPI,G-Pay, போன்ற பல்வேறு டிஜிட்டல் பரிவர்த்தனைகளைதான் உபயோகம் செய்கிறார்கள்.
அதில் கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ஒவ்வொரு முறையும் கடைகளில் அல்லது ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது ஏராளமான சலுகைகள், தள்ளுபடிகள், கேஷ்பேக் போன்றவற்றை வங்கிகள் வழங்குகின்றன.
ஓவ்வொரு நபரும் ஒவ்வொருமுறையான ஷாப்பிங் முறைகளை பின்பற்றுவார்கள் .உதாரணமாக சிலர் பெரும்பாலும் சூப்பர் மார்க்கெட்,கடைகள்,துணிக்கடைகள் போன்ற இடங்களுக்கு நேரடியாக சென்று பொருட்களை வாங்குவார்கள் அப்போது அவர்கள் பெரும்பாலும் ஸ்விப்பிங் மெஷின் உபயோகம் செய்ய நேரிடும், மற்றவர்கள் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளங்களில் பொருட்கள் வாங்குவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.
சரியான ஷாப்பிங் கிரெடிட் கார்டை எப்படி தேர்வு செய்வது?
ஒவ்வொரு கிரெடிட் கார்டு வகைகளும் வங்கிகளை பொறுத்து அவற்றின் வருடாந்திர கட்டணம் ,கேஷ்பேக் சதவீதம் போன்றவற்றை தீர்மானிக்கின்றன. சில கார்டுகளை வங்கிகள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக வழங்கும்.சில கார்டுகளில் வருடாந்திர கட்டணம் செலுத்த வேண்டி வரும். நீங்கள் செலுத்த வேண்டிய வருடாந்திரக் கட்டணத்தைத் தள்ளுபடி செய்ய வங்கிகள் நிர்ணயம் செய்த தொகைக்கு ஒரு வருடத்திற்குள் கொள்முதல் செய்ய வேண்டும்.
உங்கள் தேவைக்கேற்ப சிறந்த கிரெடிட் கார்டை நீங்கள் கண்டறிந்தது கார்டைப் பயன்படுத்துவதற்கான சில குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
1.வருடாந்திர கட்டணம்.
2.வரவேற்பு பரிசு மற்றும் பதிவு போனஸ் மற்றும் கூப்பன்கள்.
3.கேஷ்பேக் பாயிண்ட்டுகள் மற்றும் ரிவார்டுபாயிண்ட்டுகள்களைப் பெறுதல்.
4.கேஷ்பேக் சதவீதம் மற்றும் இதர நன்மைகள்.
5.நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்.
சிறந்த 5 ஷாப்பிங் கிரெடிட் கார்டுகளின் பெயர்களை உங்களுக்காக தொகுத்துள்ளோம்.
- ஆக்சிஸ் ஏஸ் கிரெடிட் கார்டு (Axis Ace Credit Card).
மேலும் தெரிந்துகொள்ள : https://www.axisbank.com/retail/cards/credit-card/axis-bank-ace-credit-card/features-benefits
- Amazon Pay ICICI கிரெடிட் கார்டு.
மேலும் தெரிந்துகொள்ள : https://www.icicibank.com/Personal-Banking/cards/Consumer-Cards/Credit-Card/amazon-pay/index.page
3.SBI Simply CLICK Credit Card.
மேலும் தெரிந்துகொள்ள : https://www.sbicard.com/en/personal/credit-cards/shopping/simplyclick-sbi-card.page
4.HDFC Millennia Credit Card.
மேலும் தெரிந்துகொள்ள : https://www.hdfcbank.com/personal/pay/cards/millennia-cards/millennia-cc-new
5.Flipkart Axis Bank Credit Card.
மேலும் தெரிந்துகொள்ள : https://www.axisbank.com/retail/cards/credit-card/flipkart-axisbank-credit-card/features-benefits
கிரெடிட் கார்டுகளில் சலுகைகள் அவ்வப்போது வங்கிகளால் மாற்றம் செய்யப்பட்டு கொண்டே இருக்கும் , இவற்றை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் அவ்வப்போது அதனை தெரிந்துகொள்ளும் நிலையில் இருக்க வேண்டும்.
Disclaimer : நிதி மறுப்பு என்பது உங்கள் இணையதளத்தில் உள்ள தகவல் தொழில்முறை நிதிச் சேவைகளுக்கு மாற்றாக இல்லை என்பதை விளக்கும் அறிக்கையாகும். தளத்தின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் பயனர்கள் எடுக்கும் செயல்களுக்கு இணையதளங்கள் பொறுப்பேற்காது என்பதை நிதி மறுப்புகள் அடிக்கடி குறிப்பிடுகின்றன.