இன்று பெரும்பாலும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதை நிறைய தனிநபர்கள் விரும்புகிறார்கள்,கடந்த சில மாதங்களில், கிரெடிட் கார்டு பயனாளர்கள் தங்கள் வாடகைக் கட்டணத்தை பல்வேறு வாடகை கட்டணம் செலுத்தும் தளங்கள் மற்றும் அப்ளிகேஷன்களை பயன்படுத்தி செலுத்தி வருகின்றனர்.
வாடகை செலுத்தும் தளங்கள் மூலம் வசூலிக்கப்படும் வசதிக் கட்டணத்தை நீங்கள் (1% முதல் 3% வரை) செலுத்தி இருக்கலாம், ஆனால் உங்களிடம் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், இனிமேல் அப்படி இல்லை. ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு இருந்தால், இதைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு தொடர்ந்து படிக்கவும்.
வங்கிகள் இப்போது கிரெடிட் கார்டுகள் மூலம் வாடகை செலுத்துவதற்கான செயலாக்க கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, ஐசிஐசிஐ வங்கியும் சமீபத்தில் ஒரு புதிய அறிவிப்பை கொண்டு வந்துள்ளது.ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துவதற்கு 1% கட்டணத்தை வசூலிக்கும்.இது அக்டோபர் 20, 2022 முதல் நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவிப்பை வெளியீடு செய்துள்ளது.
ஐசிஐசிஐ வங்கி அறிமுகப்படுத்திய 1% வசதிக் கட்டணம், ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் வாடகைப் பணம் செலுத்தும் சில அட்டைதாரர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தியாக இருக்கலாம். ஆனால், அட்டை வழங்குபவர் இந்த முடிவுக்கு வருவதற்கு ஏதேனும் உண்மையான காரணம் இருந்திருக்கும். கிரெடிட் கார்டுகளின் வாடகைக் கட்டண அம்சத்தை தவறாகப் பயன்படுத்துவதோ அல்லது வேறு சில காரணங்களோ காரணமாக இருக்கலாம்.
ஏற்கனவே வாடகை செலுத்தும் தளங்கள் செயலாக்க கட்டணத்தை அவர்களின் தளங்களுக்கு ஏற்ப வசூல் செய்து வருகின்றனர்.இதோடு வங்கிகளும் இந்த நடைமுறையை பின்பற்றினால் கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துபவர்கள் அதிக கட்டணம் செலுத்த நேரிடும் என்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.
இதனை தொடர்ந்து மற்ற வங்கிகளும் இது போன்று நடைமுறையை பின்பற்ற நேரிடலாம்.நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்துபவராக இருந்தால்,நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் சமீபத்திய கட்டண விவரங்களை தெரிந்து கொண்டு பின்னர் பயன்படுத்தி பயன்பெறுங்கள்.