முதுகுவலி குறிப்பாக மனிதர்களுக்கு பொதுவானது அதுவும் இன்றைய தொழில்நுட்ப உலகில் பெரும்பாலான மக்களின் வேலைகள் அமர்ந்து செய்யக்கூடியவையாகவே இருக்கிறது . முன்னர் போல் யாரும் உடல் உழைப்பை பெரிதும் விரும்புவது இல்லை.
முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மட்டுமே முதுகு தண்டுவட வலி குறித்து மருத்துவரை அணுகுவதை வழக்கமாக கொண்டிருந்தார்கள் .ஆனால் தற்போதைய நவீன உலகில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்,கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் ,வேலைக்கு செல்லும் இளைஞர்கள்,பெண்மணிகள் உட்பட அனைத்து வயதினரும் தற்போது முதுகுவலியை எதிர்கொள்கிறார்கள்.
முதுகுவலிக்கு காரணங்கள் இதுதான் என்று ஒன்றை மட்டும் சொல்ல முடியாத அளவுக்கு பல காரணங்கள் உண்டு.இளம்வயதில் முதுகுவலிக்கு பொதுவான காரணம் என்றால் அது பள்ளி மற்றும் அலுவலகத்தில் பெரும்பாலும் நாற்காலியில் உட்காரும் தோரணை பிழை என்று சொல்லலாம்.
நம் உடலின் இயக்கம் மற்றும் உணர்வு நரம்புகளை மூளையுடன் இணைக்கும் நரம்புகளின் தொடர்தான் தண்டுவட நரம்பு மண்டலம்.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தண்டுவடம்,விபத்தினால் ஏற்படும் தண்டுவட முறிவு,எலும்பு நகர்வு,வயது முதிர்வு போன்ற பல காரணங்களால் பாதிக்கப்படுகிறது.
இதற்கு பல சிகிச்சை முறைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் பாதிப்பு ஏற்பட்ட பின்னர்தான் நாம் பெரும்பாலும் கருத்தில் கொள்கின்றோம்,அதன் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகள்,உடற்பயிற்சி மற்றும் உணவுகள் மூலம் தீர்வு காண முயற்சிசெய்கிறோம்.
நாம் செய்யவேண்டிய முக்கியமான ஒன்று நமக்கு முதுகு தண்டுவட வலி இருக்கிறதோ இல்லையோ அது வராமல் தடுக்க மற்றும் அதில் இருந்து நம்மை காத்துக்கொள்ள முறையான உணவுமுறை மற்றும் முறையான உடற்பயிற்சி கடைபிடிக்க வேண்டியது நமது கடமை.
இந்த பதிவில் நாம் நமக்கு எளிதில் கிடைக்கும் கொண்டைக்கடலையின் மூலம் தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்று எவ்வாறு முதுகு தண்டுவடத்தை பாதுகாத்துக்கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.
கொண்டைக்கடலை அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு பொருளாகும்.இதில் பாஸ்பரஸ்,மக்னீசியம்,தையமின் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன.கொண்டைக்கடலையில் புரோடீன்களும்,இரும்புச்சத்துக்களும் நிறைந்து உள்ளன.இந்த கொண்டைக்கடலையானது முதுகு தண்டு வளையங்கள் போன்றுதான் இருக்கும் .
1.முதுகு தண்டுவடத்தில் தோன்றும் பிரச்சனைகளுக்கு கொண்டைக்கடலை சிறந்த உணவுப்பொருளாகும்.
2.முதுகுவலி,முதுகுத்தண்டில் பிரச்னை உள்ளவர்கள் தினமும் கொண்டைக்கடலையை உட்கொள்ள வேண்டும்.
3.மூலநோய்,வாதநோய் மற்றும் மலச்சிக்கல் உள்ளவர்கள் கொண்டைக்கடலையை தவிர்த்து கொள்ளுங்கள்.
இதனை தவிர காலை முதல் மாலை வரை ஒரே இடத்தில் பணி செய்பவர்கள் யோகா செய்யலாம். வேலைகளுக்கு நடுவே சிறு இடைவெளியில் நடக்கலாம் மற்றும் அவ்வப்போது இருக்கையில் இருந்து எழுந்து அமரலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பதன் மூலம் தசைபிடிப்பு இல்லாமல் பார்த்துகொள்ளலாம். உடலில் நோய் பாதிப்பால் உண்டாகும் முதுகுவலியை தவிர்த்து வாழ்க்கை முறையால் வரும் முதுகுவலியை எளிதாக தடுத்து இணைமையாக வாழலாம்.
முதுகுவலி, தசைவலி, பிடிப்புகள், மூட்டுவலி, மாதவிடாய் வலி, வயிற்றுவலி போன்ற அசௌகரியத்தை ஆற்றுவதற்கு சூடான வெந்நீரை கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம். அதற்க்காக தாங்கள் இது போன்ற வெந்நீர்ப்பைகளை பயன்படுத்தி வலியில் இருந்து உடனடியாக விடுபடலாம்.
தாங்கள் கீழ்கண்ட லிங்க்-ஐ பயன்படுத்தி சுடு நீர் பையினை வாங்கிக்கொள்ளலாம்.
Click Here to Buy https://amzn.to/3SAGZTs