கிரெடிட் கார்டுகள் என்பது ஒரு வகையான பாதுகாப்பற்ற கடனாகும்.கிரெடிட் கார்டுகள் ஒரு பயனுள்ள நிதிக் கருவியாக இருந்தாலும் கூட, அதனை கவனமாகப் பயன்படுத்தப்படாவிட்டால் அதிக அளவு கடனையும் விளைவிக்கும்.
கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்:
கிரெடிட் கார்டு மூலம், ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை கடன் வழங்குபவரிடம் இருந்து கடன் வாங்கலாம். ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டிய குறைந்தபட்சத் தொகையை நீங்கள் செலுத்தினால் தேவையற்ற அபராதங்களைத் தவிர்க்கலாம்.
கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும் போது பின்வரும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்:
1.உங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள்; அவ்வாறு செய்யத் தவறினால் நீங்கள் தாமத கட்டணம் மற்றும் அபராதங்கள் செலுத்த நேரிடும் மேலும் அது உங்கள் கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கலாம்.
2.உங்கள் கார்டின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்,உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்காமல் தடுக்க, உங்கள் கிரெடிட் வரம்பில் நீங்கள் முடிந்தவரை 30% க்குக் கீழே உங்கள் இருப்பைப் பராமரிக்க முயற்சிக்கவும்.
3.உங்கள் கார்டு தொடர்பான வட்டி விகிதங்கள்,தாமத கட்டணம்,ஆண்டு கட்டணம் செலவுகள் மற்றும் ஆஃபர்கள் , மற்றும் ரிவார்ட் பாய்ண்டுகள் பற்றிய விவரங்கள் உங்களுக்குத் தெரிந்திருப்பதை உறுதிசெய்யவும்.
4.கிரெடிட் கார்டுகளில் பணமாக எடுப்பதை தவிர்க்கவும்: பணமாக எடுக்கும் பொழுது நீங்கள் அதிக கட்டணங்கள் மற்றும் வட்டி செலுத்த நேரிடும் , மேலும் அவை கடைசி முயற்சியாக ஏதேனும் அவசர தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
5.உங்கள் கார்டைப் பாதுகாப்பான இடத்தில் வைத்து கொள்ளவும்,யாரிடமும் பாஸ்வர்டுகளை பகிர்ந்து கொள்ளவேண்டாம். ஏதேனும் தவிர்க்கமுடியாத தருணங்களில் தொலைந்து போனாலோ அல்லது திருடப்பட்டு இருந்தாலோ உடனடியா உங்கள் வங்கியை அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு உங்கள் கார்டு-ஐ பிளாக் செய்யுங்கள்.
கிரெடிட் கார்டுகள் ஒரு அவசர காலத்தில் உதவும் நிதி கருவியாகும், அவற்றை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தலாம் .அவற்றை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதுகாக்கும் . இந்த குறிப்புகளைப் பின்பற்றி, நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவதன் மூலம், தேவையற்ற ஆபத்துக்களைத் தவிர்த்து, கிரெடிட் கார்டுகளில் உள்ள நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.