இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) விதிமுறைகளின்படி, மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டாளர்கள் நாமினேஷன் செய்ய அல்லது விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்த மார்ச் -31 வரை அவகாசம் அளித்துள்ளது.
ஏதேனும் எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டால், ஒரு முறையான நாமினி இருந்தால், உங்கள் முதலீடுகள் எந்த வித சட்ட இடையூறும் இல்லாமல் நீங்கள் குறிப்பிட்டுள்ள பயனாளிக்கு மாற்றப்படுவதை எளிதாக்குவதற்கான எளிய வழியாகும்.
அதுமட்டும் இன்றி எந்தவொரு சட்டரீதியான சிக்கல்களும் சர்ச்சைகளும் இல்லாமல், நாமினி அல்லது நாமினி மூலம் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நிதி அனுப்பப்படுவதை நீங்கள் முன்கூட்டியே உறுதி செய்துக்கொள்ளலாம் .
இருப்பினும், உங்களின் நியமன விவரங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருப்பது மற்றும் உங்கள் தற்போதைய விருப்பங்களை நீங்கள் பரிந்துரைக்க விரும்பவில்லை என்பதை உறுதிப்படுத்த SEBI-ஆல் அறிவுறுத்தப்படுகிறது.
உங்கள் மியூச்சுவல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளில் நாமினியைப் புதுப்பிப்பது முதலீடு செய்வது போலவே முக்கியமானது.
உங்களது மியூச்சுவல் ஃபண்ட் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஒரு நியமனப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் அல்லது உங்கள் மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தரின் ஆன்லைன் போர்டல் அல்லது பதிவாளர் மற்றும் பரிமாற்ற முகவர் (RTA) மூலம் உங்கள் நாமினி விவரங்களை எளிதாகப் புதுப்பிக்கலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ பயன்படுத்தி CAMS-ல் (கணினி வயது மேலாண்மை சேவைகள்) ஆன்லைன் மூலம் உங்களது நாமினியை புதியதாகவோ அல்லது மாற்றியோ பதிவு செய்துகொள்ளலாம்.
CAMS லிங்க் – https://digital.camsonline.com/changeofnomination
1.முதலில் உங்கள் PAN நம்பரை கீழே உள்ளது போல் நிரப்பிக்கொள்ளுங்கள்.
2.கீழே காண்பிக்கப்பட்டுள்ள முறைப்படி உங்களது அனைத்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டிற்கு ஒரே முறையில் நாமினியை அப்டேட் செய்துகொள்ளலாம்.
3.அதன் பின்னர் உங்களுடைய பதிசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ என்டர் செய்து கொள்ளுங்கள்.
4.பின்னர் நீங்கள் நாமினியை நியமனம் செய்ய அல்லது மாற்ற அல்லது விருப்பமில்லை போன்ற இந்த மூன்றில் உங்கள் விருப்பத்தை தேர்வுசெய்து கொள்ளுங்கள்.
5.நீங்கள் புதிதாகவோ அல்லது மாற்றம் செய்யும் நபரின் பெயர்,பிறந்ததேதி,நாமினி ஒதுக்கீடு சதவீதம் மற்றும் அவருடைய உறவுமுறையை பதிவு செய்து கொள்ளலாம் .
நீங்கள் விவரங்களை உள்ளிட்டதும், செயல்முறையை முடிக்க “Proceed” பட்டனை கிளிக் செய்யவும்.
CAMS ஆனது உங்களது விவரங்களைச் சரிபார்த்து,செயல்முறை முடிந்ததும் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட E-mail முகவரியில் தகவல் செயலாக்கப்பட்டது என்ற செய்தியைப் பெறலாம்.
மேலும் தகவல் அல்லது சந்தேகங்களுக்கு உங்களது வங்கி அல்லது மியூச்சுவல் பண்டு முகவர் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
CAMS வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண் -1800 419 2267
குறிப்பு:
மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு சந்தை அபாயத்திற்கு உட்பட்டது, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்