G-pay, Amazon-Pay, PhonePe, Paytm போன்ற டிஜிட்டல் பேமென்ட் முறைகளை அதிகமாக உபயோகம் செய்கிறவரா நீங்கள்..!!! இதோ உங்களுக்கான புதிய விதிமுறைகளை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உபயோகம் செய்யுங்கள்.
டீ-கடை தொடங்கி மளிகைக்கடை,உணவகங்கள்,ஷாப்பிங்மால்கள் வரை எங்கு பார்த்தாலும் டிஜிட்டல் பேமென்ட்ஸ் உலகமாக திகழும் நமது நாட்டில் இப்பொது பெரும்பாலும் மக்கள் UPI வசதியுடன் பணப்பரிவர்தனைகளை G-pay, Amazon-Pay,PhonePe,Paytm போன்ற முன்னணி ஆஃப்களின் மூலம் இலவசமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இனிமேல் அப்படி கிடையாது நீங்கள் 90 முறைக்கு மேல் G-pay, Amazon-Pay, PhonePe, Paytm பயன்படுத்தினால் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வங்கிகள் தரப்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி வாட்ஸ்-அப்,பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .
இந்த தகவல் உண்மையா அப்படின்னு கேட்டா உண்மைதான்.எல்லா வங்கிகளும் பண்றாங்களா அப்படின்னு கேட்டா கிடையாது ஒரு சில குறிப்பிட்ட வங்கிகள் பண்றாங்க இதனை உறுதி செய்துகொள்ள உங்கள் வங்கிகளில் சென்று கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
நீங்க ஒரு பேங்க்ல சேவிங்ஸ் அக்கவுண்ட் வச்சி இருப்பிங்க அந்த சேவிங்ஸ் அக்கவுண்ட G-pay, Amazon-Pay, PhonePe, Paytm மாதிரியான ஒரு UPI- ஆப் மூலமா இணைத்து தான் பொதுவா பயன்படுத்துறோம் அப்படி ஆறு மாத காலத்துக்கு ஒருவர் 90 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் அதுக்கு மேல பயன்படுத்தினால் சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கிறார்கள்.
இந்த கட்டணம் அணைத்து வங்கிகளிலும் பிடித்தம் செய்யப்படுகிறதா என்கிற தகவல் முழுமையாக இல்லை ஆனால் ஒரு சில வங்கிகள் Portfolio charges என்கிற முறையில் 6 மாதத்திற்கு ஒரு முறை அதாவது ( ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரை மற்றும் அக்டோபரில் இருந்து மார்ச் வரை) பிடித்தம் செய்கின்றன.
அதாவது 91 வது முறையில் இருந்து நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷனுக்கும் 2.25 ரூபாய்+ ஜி.எஸ்.டி 18% அதாவது (2.25 + 0.4= 2.65 ரூபாய் ) நீங்ககள் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கும்.
இந்த கட்டணத்தை வங்கிகள் இரண்டு தவணைகளாக பிரித்து ஏப்ரலில் இருந்து செப்டம்பர் வரைக்கும் அக்டோபரில் இருந்து மார்ச் வரைக்கும் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
உதாரணமாக நீங்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் 105 முறை பயன்படுத்தி உள்ளீரிகள் என்றால்.
91-வது முறைக்கு மேல் உள்ள ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷன்-களுக்கும் 2.65 ரூபாய் கணக்கிட்டு மொத்தமாக பிடித்தம் செய்யப்படும்.
(மொத்தம் -இலவசம் ) 105 – 90 = (கூடுதல் பரிவர்த்தனைகள்) 15
15 X 2.65 ரூ = 39.75 ருபாய் உங்கள் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
குறிப்பு:
நீங்கள் கூடுதல் கட்டணங்களை தவிர்க்க முடிந்தவரை மற்றவர்களுக்கு பணம் செலுத்த வங்கிகள் இலவசமாக வழங்கும் NEFT வசதியின் மூலம் அவர்களின் வங்கி கணக்கை நீங்கள் பயன்படுத்தும் வங்கியின் நெட்பாங்கிங் முறையில் உள்ள payee லிஸ்ட்-ல் இணைத்து பணப்பரிமாற்றம் செய்யலாம்.