நீங்கள் ரயிலில் பயணம் செய்யும் போதெல்லாம், பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். ஒரு சிறிய தவறு கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிடும்.இரயிலில் பயணம் செய்வதால் என்ன சிக்கல் வந்துவிடப்போகிறது என்று நீங்கள் நினைக்கலாம்.நான் முன்பதிவு செய்துவிட்டேன் எனக்கான இருக்கையில் முறைப்படி அமர்ந்து விட்டேன் பின்னர் என்ன சிக்கல் வரப்போகிறது என்று நீங்கள் எண்ணலாம்,ஆனால் இந்தியன் இரயில்வே விதிகளைக் கடைப்பிடிப்பதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி,இரவு நேர பயணத்தின் போது மொபைலில் சத்தமாக பாடல்களை கேட்பது, நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ரயில்களில் குழுவாக அமர்ந்து சத்தமாக பேசுவதாகவும் ரயில்வே நிர்வாகத்திற்கு பல புகார்கள் வந்தன.சில பயணிகளிடம் இருந்து ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் தங்களிடம் உரத்த குரலில் பேசுவதாகவும் முறையான விளக்கம் அளிக்கவில்லை எனவும் புகார் அளித்துள்ளனர்.இது தவிர, பல பயணிகள் இரவு 10 மணிக்குப் பிறகும் விளக்குகளை தேவையின்றி எரிய வைப்பதால், அவர்களின் தூக்கம் கெடுகிறது. இதைக் கருத்தில் கொண்டு ரயில்வே புதிய விதியை வகுத்துள்ளது.
புதிய விதிகளின்படி, இரயிலில் பயணம் செய்யும் போது இரவு 10 மணிக்கு மேல் மொபைலில் வேகமாக பேசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இரயில்வே வாரியம் அறிவிப்பை வெளியிட்டுஉள்ளது. இரவுப் பயணத்தின் போது பயணிகள் சத்தமாகப் பேசவோ, இசையைக் கேட்கவோ முடியாது. சகா பயணிகள் யாராவது புகார் அளித்தால், அதைத் தீர்க்கும் பொறுப்பு இரயிலில் இருக்கும் ஊழியர்களின் பொறுப்பாகும்.
நீங்கள் இரவு நேர பயணம் செய்யும் பொது மிகவும் கவனமா இருங்கள் சிறிய தவறு கூட உங்களை பெரிய சிக்கலில் மாட்டிவிட கூடும் . நாம் இரயில் பயணத்தை தேர்வு செய்வதே நிம்மதியாக நம் பயணம் இருக்க வேண்டும் என்பதற்காகவே,முடிந்த வரை இரயில்வே விதிகளை கடைபிடித்து உங்கள் பயணத்தை இனிதாக மாற்றுங்கள்.