இந்த பதிவுல நாம சாப்பிடுறதுக்கான சரியான நேரம் என்னவென்று பார்க்கலாம் வாங்க …!!!
இதுல என்ன புதுசா இருக்கப்போகுது பொதுவா காலை ,மதியம் ,இரவு இந்த மூன்று வேலையும் சாப்பிட வேண்டியதுதான்,அப்படினு சாதாரணமா நினைக்காதீங்க ….!!!
இப்போ இருக்குற இந்த காலகட்டத்துல நாம எல்லாரும் பெரும்பாலும் வேலைக்கு போறவங்களாகதான் இருப்போம்.
அப்படி இருக்கும் போது நாம எப்போ காலைல எந்திரிக்கிறோமோ அதுல இருந்து நம்ம அன்றாட கடமைகளை முடிச்சிட்டு வேலைக்கு போறப்ப தான் நாம பொதுவா சாப்பிடுறோம்,
அதுலயும் சில பேரு நேரமில்லாமல் அதையும் கூட தவிர்த்துவிட்டு வேலைக்கு அவசர அவசரமா கிளம்பி போயிடுறோம்.
இதனால என்ன என்ன உடல் நல பிரச்சனைகள் வரும் என்று நாம யோசிக்கறது இல்லை .
அதுலயும் சில பேரு அவங்களுக்கு எப்போ நேரம் கிடைக்குதோ அப்போ தான் அவங்களோட உணவை சாப்பிடுறாங்க.
அதுலாம் எங்களுக்கு தெரியும் நீங்க விசயத்துக்கு வாங்க அப்படிங்கிற உங்க மைண்டு வாய்ஸ் எங்களுக்கு புரியுது….
வாங்க நேரடியா விஷயத்துக்கு போவோம்….!!!
1.காலை உணவு – காலை உணவு சாப்பிட சரியான நேரம் (7 AM – 8 AM ) தயவு செய்து 10 மணிக்கு மேல் காலை உணவை தவிர்த்துவிடுங்கள்.
2.மதிய உணவு – மதிய உணவை சாப்பிட சரியான நேரம் (12.30 PM – 2 PM ) தயவு செய்து 4 மணிக்கு மேல் மதிய உணவை தவிர்த்துவிடுங்கள்.முடிந்தவரை காலை நாம் சாப்பிட்ட நேரத்திலிருந்து 4 மணி நேர இடைவெளிக்கு பின் மதிய உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
3. இரவு உணவு – இரவு உணவை சாப்பிட சரியான நேரம் (6 PM – 8.30 PM) தயவு செய்து இரவு 10 மணிக்குள் இரவு உணவை முடித்துவிடுங்கள்.
குறிப்பாக: நீங்கள் உறங்குவதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட்டுவிடுங்கள்.
இப்பொழுது தங்களுக்கு ஒரு வித தெளிவு கிடைத்திருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்….!
நன்றி.