இவ்வுலகில் மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவரும் உடல் நலத்துடனும், ஆரோக்கியமாகவும் வாழவே விரும்புகின்றோம் …!!!
ஆனால்,அதற்கான வழிமுறைகளை தான் யாரும் கடைபிடிப்பதில்லை.
இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில் நமது தினசரி வாழ்வில் நாம் நலமுடனும்,ஆரோக்கியமாகவும் இருக்க பின்வரும் மூன்று நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும் .
வாருங்கள் அவை என்னவென்று பார்க்கலாம்:
1.தினம் இரண்டு – தினமும் இரண்டு முறை (காலை மற்றும் மாலை) மலம் கழிக்க வேண்டும்.
2.மாதம் இரண்டு -மாதத்தில் இரண்டு முறை ஏதாவது ஒரு வேளை மட்டும் உணவு ஏதும் உண்ணாமல் இருக்க வேண்டும் .(அதாவது விரதம் போன்று )
3.வருடம் இரண்டு – வருடத்தில் இரண்டு முறையேனும் வயிற்றை சுத்தமாக வைத்திக்கொள்ள (வயிற்றுக்கு பேதி மருந்து எடுத்துக்கொள்வது).
மேலே கூறிய மூன்றையும் நாம் தவறாமல் பின்பற்றினால் நிச்சயம் உடல் நலம் பாதிக்காமல் நம்மை காத்துக்கொள்ளலாம் .
இது போன்ற உடல்நலம் பற்றிய தகவல்களுக்கு எங்களை தொடரவும்…!!!
பொறுப்பு துறப்பு :
எங்கள் கட்டுரை உங்களுக்கு தகவலை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு உங்களது மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகவும்.